Thursday 19 April 2012

கல்விக் கட்டண சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்வு உயர்வு : அமைச்சர் பழனியப்பன்

கல்விக் கட்டண சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்வு உயர்வு : அமைச்சர் பழனியப்பன்



தமிழகத்தில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகைப் பெறுவதற்கான குடும்ப வருமான உச்ச வரம்பு ரூ.50,000ல் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்துள்ளார்.


இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பழனியப்பன், பொறியியல் படிக்கும் மாணவர்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000க்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வந்த நிலையில், இந்த வருமான உச்சவரம்பை 2 லட்சமாக உயர்த்தியுள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 51 அரசு கல்லூரிகளில் புதிதாக 299 பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என்றும், இந்த பாடப்பிரிவுகளை நடத்த வரும் 3 ஆண்டுகளில் 841 பேராசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடு சென்று இலவசமாக உயர் கல்வி பெறுவதற்கான திட்டம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டில் அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் 2 லட்சத்து 12,450 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் பழனியப்பன் கூறியுள்ளார்.
MyFreeCopyright.com Registered & Protected