Tuesday 19 June 2012


ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் - 35 லட்சம் மாணவர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க உத்தரவு



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 35 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இத்திட்டத்தால், தொலை தூரத்தில் இருந்து பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு&' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதுவரை, சென்னையில் மட்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, சாலை போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு, 32 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு, 35 லட்சம் மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றார்.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ரேண்டம் எண் நாளை வெளியீடு

சென்னை : தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 1,695 இடங்கள் உள்ளன. மேலும், 11 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 839 இடங்கள் உள்ளன.

அதேபோல்,
சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 பிடிஎஸ் இடமும், தனியார் கல்லூரியில் 847 இடங்களும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2012,2013ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை கடந்த மே 15ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 40,317 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 28,500 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கினர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நாளை மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சுழற்சி (ரேண்டம்) எண் வழங்கப்படும். 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர் ந்து, ஜூலை 5ம் தேதி காலை முதல் மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சலிங் தொடங்கும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கவுன்சலிங் நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

1,040 மையங்களில் டி.இ.டி., தேர்வு நடக்கிறது : டி.ஆர்.பி., தேர்வுகளில் இதுவே அதிகம்


ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதுவரை டி.ஆர்.பி., நடத்திய தேர்வுகளில், அதிகபட்ச மையங்களில் நடக்கும் தேர்வு இது தான். இதற்கான, "ஹால் டிக்கெட்' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது. அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 6.56 லட்சம் பேர் விண்ணப்பம் பொதுவாக, 100, 200 மையங்களில் தான் தேர்வுகள் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக, 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர்; ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3 லட்சத்து, 4 ஆயிரத்து, 248 பேரும்; இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 836 பேர் என, மொத்தம், 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 84 பேர் எழுதுகின்றனர். "ஹால் டிக்கெட்' தேர்வர்களுக்கு, நேற்று முதல், "ஹால் டிக்கெட்' அனுப்பப்படுகிறது. முதலில், தென் மாவட்டங்களுக்கும், கடைசியாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்படும். 22ம் தேதிக்குள், அனைவருக்கும், "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. "ஹால் டிக்கெட்' பின்புறம், விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை குறிப்பிடாமல் இருந்தால், தேர்வு அறையில் தேர்வு செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் தாள் தேர்வில், விருப்பப் பாடத்தை மாற்றி எழுதியிருந்தால், விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.வியாழக்கிழமை ஏன்? டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகள் நடத்தும் அனைத்து தேர்வுகளும், பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது. இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ""ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேறு வழியின்றி, வியாழக்கிழமை நடத்துகிறோம். ஆகஸ்டில் நடத்தினால், மேலும் கால தாமதம் ஏற்படும்,'' என்றனர். டி.இ.டி., தேர்வுக்கு, "கீ-ஆன்சர்' வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் ஆட்சேபங்களைப் பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

TNPSC-GROUP-4-syllabus-Question-Papers-Model


State of Tamil Nadu Announced the India’s biggest government job opportunity  during the year of 2012. This examination conducted by TNPSC Examination Board. All instruction about the Group 4 examinationupdated from official websites. Question paper syllabus based on Tamilnadu state board school books from  6th standard  to 12th standard.  Totally 10718 vacancies are available to replace the postings.Various categories jobs applications are invited. All field vacancies details mentioned below.
1. Junior Assistant (Non – Security) – 4865 vacancies.
2. Junior Assistant (Security) – 292 vacancies.
3. Bill Collector, Grade-I – 31 vacancies.
4. Typist – 3674 vacancies.
5. Steno-Typist (Grade III) – 1128 vacancies.
6. Field Surveyor – 326 vacancies.
7. Draftsman – 402 vacancies.
And TNPSC board announced the syllabus and attachment add from TNPSC Group 4 Examination official website.Here Find and add the model question papers for last years. Some experts are prepared and released the booklets for this examination.Collect the bellow mentioned books. This books cover all whole Syllabus,
Text Books published by Tamil Nadu Text Books Socie
Science                           ‐          6, 7, 8, 9, 10th standard
Physics                           ‐          11, 12th standard
Chemistry                      ‐          11, 12th standard
Biology                           ‐          11, 12th standard
Social Science                ‐          6, 7, 8, 9, 10 standards
History & INM               ‐          11, 12th standard
Geography                     ‐          11, 12th standard
Political Science            ‐          11, 12th standard
Mathematics                  ‐          7, 8, 9, 10 standards
Logic                                ‐          12th standard (Old)
Psychology                     ‐          12th standard (Old)
Above books available below sites only.visit this sites and download all Taminadu government text book to prepare well.




மேல்நிலைக்கல்விப் பணி - 01.01.2012 அன்றைய நிலையில் - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல் - வெளியிட்டமை - மேல்முறையீடு பெறப்பட்டமை - திருத்திய பட்டியல் வெளியீடு



Posted: 15 Jun 2012 06:40 PM PDT
Three per cent quota in government service for the disabled is only for initial appointments, and the government cannot be directed to extend it for promotions, ruled the Madras High Court on Monday.
Dismissing a petition seeking a direction to the government to reserve three per cent for promotions to physically handicapped persons, Justice K. Chandru said: “The provisions are contemplated only for initial appointments and not for promotions. The petitioner has not made out any case to seek a direction to provide for reservation for the disabled persons in the matter of promotions in respect of State services.”
The writ petition was filed by the South Arcot Vallalar District Handicapped Welfare Association, represented by its president S. Shanmugam, seeking reservation for the disabled in promotions. If suitable employees were not available in a particular year, the unfilled posts could be carried over for the next three succeeding years.
When the matter was heard, the State Commissioner for the Disabled stated that there was no government policy to reserve three per cent of posts in promotions to be filled from the disabled category.
The disabled persons were considered only for the direct recruitment posts under three per cent reservation as per a G.O issued in 1981. Promotions were made in government departments based on seniority or transfer of service.
Mr. Justice Chandru said it could be seen from the G.O. that reservation for disabled persons was only horizontal and not vertical as contemplated in Article 16 of the Constitution.
He said that even in respect of the Scheduled Castes and Scheduled Tribes, it was only by virtue of amendments made to the Constitution and by introduction of Article 16(4A) that the State had been empowered to make provision for reservation in promotion to any class or classes of posts in the service
source: The Hindu

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்


இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
MyFreeCopyright.com Registered & Protected