Friday 25 May 2012


உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ( 6, 7, 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் ) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான பயிற்சியினை மே மாதத்திற்குள் அளிக்க SCERT திட்டம்

கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு பல புதுமைகளை கல்வித்துறையில் புகுத்தி வருகிறது.இதில் CCEஎனும்  தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை முக்கியமானதாகும்.
மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதோடு அர்த்தமுள்ள மதிப்பீட்டுக்கு வழிகாட்டுகிறது. இப்பயிற்சியானது முதல் முறையாக கல்வி  ஆண்டு தொடங்கும் முன்பே ஆசிரியர்களுக்கு அளிக்கபடுவது சிறப்பாகும். இப்பயிற்சியானது அனைத்து நிலை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்ககல்வி ஆசிரியர்களுக்கும்  முன்பே அளிக்கப்பட்டது. உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கும் பொருட்டு மாநில அளவில் பொள்ளாச்சியிலும்மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட DIET லும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நான்கு ஒன்றியங்களை இணைத்தவாறு ஓர் இடத்தில நடத்தSCERT திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியானது மே28 ஆம் தேதியில்  இருந்து 31 மே-க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆய்வு கூட்டங்கள் மற்றும் பல்வேறு பணிகள் இருப்பதால் தேதிகள் மாற நிறைய வாய்ப்பு உள்ளது 
MyFreeCopyright.com Registered & Protected