Sunday 29 April 2012

PROMOTION PANELS 2012-13


                    PROMOTION PANELS 2012-13 

                              AS ON 01-01-2012

HR.SEC HM PROMOTION FROM PG & HIGH SCHOOL HM

S.G TO B.T ASST. PROMOTION (SCIENCE).

S.G TO B.T ASST. PROMOTION (HISTORY).

S.G TO B.T ASST. PROMOTION (GEOGRAPHY).


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான ( CCE) ஆசிரியர் தெளிவுரை

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1


விண்ணில் வெற்றிகரமாகசீறிப்பாய்ந்தத ரிசாட்-1

இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரீசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுமார் 380 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை சம்பந்தமான துறைகளுககும், மற்றும் அனைத்து விதமான துறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு,மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ள காலகட்டங்களிலும் புகைப்ப‌டங்களை எடுத்து அனுப்பும் திற‌மை கொண்டது.
சரியான பாதை‌யில் செல்கிறது; திட்டமிட்டபடி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த ரிசாட்-1 சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1858 கிலோ எடை ‌கொண்ட இந்த செயற்கை கோளின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி , தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
நீண்ட தூர கவுன்ட் டவுன்கள்: முன்னதாக 72 மணி நேர கவுன்ட் டவுன்கடந்த திங்கட்கிழமை முதல் துவங்கி திட்டமிட்டபடி இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்க 5.47 மணியளவில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
பயன்கள்:ரிசாட் இரவு மற்றும் பகல் என எந்த நேரத்திலும் காலநிலை குறித்து துல்லியமாக புகைப்படத்தி‌னைஅனுப்பும் திறன் கொண்டது.
10ஆண்டு கனவு: ரிசாட்-1 வக‌ை செயற்கைகோள் 10 ஆண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பில் இந்தயாவிலே‌யே தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் ஆகும். கடந்த 2009-ம்ஆண்டில் செலுத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைகோள் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர‌ரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்தை துல்லியமாக கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஏவப்பட்ட ரிசாட் 1 வகை செயற்கைகோள் தன்னுடைய இலக்கை 596 கி.மீ., தொலைவில் உள்ள புவிவட்ட பாதையை அடைந்துள்ளது.
விஞ்ஞானிகள் பெருமிதம்: தனிச்‌சிறப்பு வாய்ந்த தொழில் நுட்பம் மற்ற நாடுகளின் உதவியில்லாமல் நம்முடைய ‌‌தொழி்ல்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரேல் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போதைய ரிசாட் -1 விண்ணில் ‌செலுத்தப்பட்டதன் மூலம் ‌ஒரே புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அதி நவீன தொழில் நுட்பம்: தற்போது ஏவப்பட்ட ரிசாட்-1 செயற்கைகோளில் எஸ்.ஏ.ஆர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1மி.மீ நீள, அகலமுள்ள பொருட்களை துல்லியமாக படம்பிடிப்பதுடன் எதிரி நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.இருப்பினும் இதுகுறித்து தகவலை இஸ்ரே வெளியிடவில்லை . மேலும் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ‌தொழில் நுட்ப பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது
.
தானிய உற்பத்தியை அதிகரிக்க பயன்படும்: ரிசாட்-1 செயற்கை கோள் தானிய உற்பத்தியை அதிகரிப்பதி்ல பெரும் பங்கு வகிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கோதுமை பயிரிடும் பரப்பளவு தேவைப்படும் நீரின் அளவு போன்றவற்றையும் துல்லியமான தகவல்களை தர வல்லது.

கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்


கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்

"கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:
வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே. இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது.

இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பழனிச்சாமி கூறினார். 

Saturday 28 April 2012

தமிழாசிரியர்கள் இனி பட்டதாரி ஆசிரியர்கள்!


தமிழாசிரியர்கள் இனி பட்டதாரி ஆசிரியர்கள்!

"தமிழாசிரியர்" என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)" என ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு வந்துள்ள உத்தரவு: "பள்ளி உதவி ஆசிரியர்" என்பது, இனிமேல், பட்டதாரி ஆசிரியர் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் தமிழாசிரியர் என எழுதாமல், அதற்கு பதிலாக, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) எனவும், அதேபோல் பிற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) என, பாட வாரியாகக் குறிப்பிட வேண்டும்.
பெயர் மாற்றம் செய்யப்பட்டதையே, வருகை பதிவேடு, ஆவணங்கள் உட்பட அனைத்திலும் குறிப்பிட வேண்டும். தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி, இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:teachertn

Thursday 26 April 2012

Wednesday 25 April 2012

பொது மாறுதல் பள்ளிக்கல்வி இயக்குனரின் பொது மாறுதல் விண்ணப்பம்-2012-13 செயல்முறைகள் மற்றும்

முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி


முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி


முப்பருவ தேர்வு முறை திட்டம் தொடர்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் வரும் 26ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

பட்டதாரி மற்றும் பிற ஆசிரியர்கள் பதிவு மூப்பு விபரம்

Monday 23 April 2012

கோடையில் குளிர்ச்சியாக


கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.
தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும்.
ஆரஞ்சு : பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் உதவுவது இது. ஒருவர் தொடர்ந்து ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் அவரது வாய் சுத்தமாகிறது. காய்ச்சலுக்கும் இது அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.
காய்ச்சலின்போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலுக்குத் தெம்பு அதிகரிக்கும். அதோடு, செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு ஆரஞ்சு சிறந்த மருந்து. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷம் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிப்பது நல்லது.
சாத்துக்குடி : குளிர்ச்சியான இனிப்பு சுவை கொண்ட சாத்துக்குடி தாகத்தைத் தணிக்கக் கூடியது. வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு இது உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப் படுத்துகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஆற்றல் இதில் நிறைய உள்ளது.
சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடி பழச்சாற்றை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.
வெள்ளரிக்காய் : வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகை உண்டு. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் அதிகப் பலன்கள் கிட்டும். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களும் இதை சாப்பிடுவது நல்லது.
நன்றி: vayal

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிசீலிக்கப்படும் இரட்டை பட்டங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு மட்டுமே !



நன்றி: teachertn

Sunday 22 April 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்திற்கு தனி இயக்குனர்


ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்திற்கு தனி இயக்குனர்

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இயக்குனர் மற்றும் முதன்னை கல்வி அலுவலர் பணியிடங்களை தோற்றுவித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

2010 ஆக., 23 பிறகு பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராக பணியை தொடர முடியும் என்பதால், இதற்காக ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களையும், ஆசிரியர் தேர்வு வாரியம் தான் தேர்வு செய்து பணி நியமனம் செய்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது "சீனியாரிட்டி' முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

தற்போது இடைநிலை ஆசிரியர்களை தவிர, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களை போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்கின்றனர். தற்போது, இதன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. 

தேர்வுக்காக இதுவரை 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய போட்டி தேர்வு மற்றும் முடிவுகள் வெளியிடுவதிலும் திணறும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தகுதி தேர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 

இதை தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வை கவனிக்க, தனி இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்திற்கு அனுமதி கோரி, அரசை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டிருந்தது. அதன்படி, பணியிடம் தோற்றுவித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பணியிடமும் விரைவில் நியமிக்கப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 

25-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
25-ந்தேதி முதன்மை தேர்வர்களும்,
26-ந்தேதி உதவி தேர்வர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை துவக்குவர். 

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை


விண்ணப்ப விநியோகம் மே முதல் வாரத்தில் துவங்கும். மே 31 வரை விண்ணப்பம் வழங்கப்படும்.

Thursday 19 April 2012

கல்விக் கட்டண சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்வு உயர்வு : அமைச்சர் பழனியப்பன்

கல்விக் கட்டண சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்வு உயர்வு : அமைச்சர் பழனியப்பன்



தமிழகத்தில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகைப் பெறுவதற்கான குடும்ப வருமான உச்ச வரம்பு ரூ.50,000ல் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்துள்ளார்.


இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பழனியப்பன், பொறியியல் படிக்கும் மாணவர்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000க்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வந்த நிலையில், இந்த வருமான உச்சவரம்பை 2 லட்சமாக உயர்த்தியுள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 51 அரசு கல்லூரிகளில் புதிதாக 299 பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என்றும், இந்த பாடப்பிரிவுகளை நடத்த வரும் 3 ஆண்டுகளில் 841 பேராசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடு சென்று இலவசமாக உயர் கல்வி பெறுவதற்கான திட்டம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டில் அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் 2 லட்சத்து 12,450 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் பழனியப்பன் கூறியுள்ளார்.

Wednesday 18 April 2012

12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுநர் குழு: அமைச்சர் தகவல்

12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுநர் குழு: அமைச்சர் தகவல்


சென்னை, ஏப்.18: கல்வியின் தரத்தை உயர்த்த 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆய்வுசெய்ய வல்லுநர் குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளை அவர் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்களின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் உயர்த்த கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
இவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.
கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்தல், தற்போதுள்ள பாட நூல்களின் குறைகளை கண்டறிந்து தேவையான மாற்றங்களை கொண்டு வருதல், தரமான கல்வி வழங்க கட்டிட வசதி, இருக்கை வசதி, உபகரணங்கள் ஆகிய வசதிகளை பரிந்துரைத்தல், தேவைப்படும் முக்கியமான கல்விகள் ஆலோசனைகளை வழங்குதல், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த அரசு கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்-4,207, பட்டதாரி ஆசிரியர்கள்-17,380, சிறப்பு ஆசிரியர்கள்-865, வேளாண் ஆசிரியர்கள்-25.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நன்றி:தினமணி

Sunday 15 April 2012

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 29.04.2012 முதல் 31.05.2012 வரை கோடை விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2012 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு  29.04.2012 முதல் 31.05.2012 வரை கோடை விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2012 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கல்வி அதிகாரிகள் சந்திப்பும் பெறப்பட்ட தகவல்களும்



தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், சென்னை மாவட்டத் தலைவர் கயத்தாறு ஆகியோர் 10.04.2012 அன்று சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களைச் சந்தித்தனர்.
  • கல்வித்தகுதி 10+2+3 இருந்தால் மட்டுமே பதவி உயர்வு என்பதற்கு விலக்கு அரசிடம் கோரப்பட்டு உள்ளது. அரசின் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மதிப்புமிகு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் திருமதி. ராஜ ராஜேஸ்வரி உறுதி அளித்தார்கள். மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலரும் வழக்கு தீர்ப்பை படித்து நல்ல முடிவு எடுப்பேன் என்றார்கள்.
  • தமிழாசிரியர் பதவி உயர்விற்கு 1310 பேர் உள்ளனர். இதில் +2 முடிக்காதவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது எனவும் 1998 ஜூலை வரை சுமார் 1100 பேர் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து தமிழாசிரியராக பதவி உயர்வு (2012-2013 கல்வியாண்டு) வழங்கப்படும் என தெரிகின்றது. மற்ற பாடங்களுக்கு இறுதி பட்டியல் தயாரிக்கவில்லை. இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் S.L.B. அரசு மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியரும் நமது அமைப்பின் நாகர்கோவில் நகர செயலாளருமான செல்வராஜ் 19.03.2010 முதல் 23.10.2011 வரை சம்பளம் தொடர்பாக கோப்பு 09.04.2012ல் J.D.P. ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பள்ளிக்கலவி செயலருக்கு இந்த வாரத்தில் அனுப்பப்படும் என கூறினார்கள்.
  • ஆசிரியர் பணியிட மாறுதல் மே இறுதியிலும் பதவி உயர்வு மாறுதல் ஜூனிலும், ஆகஸ்டு இறுதிக்குள் புதிய நியமனங்களை நடத்திட கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • 23.08.2010க்கு முன்பு இடைநிலை ஆசிரியராக பணியாற்றி பட்டதாரி தமிழாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் யாரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை D.E.O. அப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பி பின் நமது சங்கத்தின் முயற்சியால் வாபஸ் பெற்றுள்ளார் என்பதை தகவலுக்கு தருகின்றோம். எனவே 23.08.2010க்கு முன்பு நியமனம் பெற்ற எந்த ஒரு ஆசிரியரும் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
  • அரசாணை எண் 123, நாள் 10.04.2012 ஊதியக் குழு முரண்பாடு களைவதற்கான கமிட்டியில் ஊதியக்குழு பாதிப்புகளை உடனடியாக கொண்டு செல்ல உள்ளோம். 
 -க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
.

பட்டதாரிகளாக உட்படுத்துதல் கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் சந்திப்பும்


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், சென்னை மாவட்டத் தலைவர் கயத்தாறு ஆகியோர் 10.04.2012 அன்று இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலை குறித்து அறிந்துகொள்ள சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களைச் சந்தித்தனர். 

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) 

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலைகுறித்து கேட்டறிந்தனர். 8000 பேர் பட்டதாரி/தமிழாசிரியர் தகுதியுடன் அரசுப் பள்ளிகளில் இருப்பதாகவும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் இது குறித்து பள்ளிக்கல்வி செயலருக்கு தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். 

பள்ளிக்கல்வி இயக்குனர் 
பள்ளிக்கல்வி இயக்குனர் நாம் வைக்கும் கோரிக்கை என்ன என்பதை கூட புரிந்து கொள்ளாமல் நீங்கள் சொன்னதை எல்லாம் செய்யமுடியாது என்கிறார். உயர் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தொடக்கக்கல்வித் துறைக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்று கூறுகின்றார். பொறுப்புள்ள அதிகாரி இப்படி பேசுவது மன வேதனை அளிக்கின்றது. 

கோரிக்கையை புரிந்து அதன் மீது செயலர் அளவிற்கு கடித தொடர்பை ஏற்படுத்தியவர் முந்தைய பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. பெருமாள்சாமி அவர்கள். எனவே மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. மணி அவர்கள் இயக்குனர் அலுவலக கடந்த கால கோப்புகளை படித்து அதன்படி எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நாங்கள் சொன்னதை தற்போது வரை எதையும் செய்ததாக தெரியவில்லை. நியாயமான கோரிக்கை குறித்து பரிசீலித்து எங்கள் அமைப்பை அழைத்து பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்திட முயற்சி செய்திட இயக்குனர் அவர்களை கேட்டுக் கொண்டோம். 

பள்ளிக்கல்வி செயலர் & பள்ளிக்கல்வி அமைச்சர் 
பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடமும் இது குறித்து கோரிக்கை மனு அளித்தோம். மானிய கோரிக்கைக்கு முந்தைய விவாத கூட்டத்தில் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படலாம் என தெரிகின்றது. 

பின்னர் ஏப்ரல் 18-ல் நடைபெறும் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் பட்டதாரி ஆசிரியர்களாக இடைநிலை ஆசிரியர்களை உட்படுத்திட வலியுறுத்தி பேசிட கோரிக்கை மனுவை சட்டமன்றக் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் அளித்து விடைபெற்றோம்.

மொத்தத்தில் நமது சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
.

Saturday 14 April 2012

ஆசிரியர் அரங்கம்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 4 ஜோடி சீருடைகள்

அரசு சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் பி.வளர்மதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:மாற்றுத் திறனாளிகளுக்கென 23 அரசு சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிரத்து 720 மாணவர்களும், சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற் பயிற்சி பிரிவில் 55 மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் நடப்பு ஆண்டு முதல் அவர்களுக்கு 4 ஜோடி சீருடைகள் ரூ.14.31 லட்சம் செலவில் வழங்கப்படும்.உணவு மானியம்-ரொக்கப் பரிசு அதிகரிப்பு: தமிழகத்தில் 23 அரசு மற்றும் 54 அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 9 ஆயிரத்து 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களின் உணவூட்டுச் செலவினமாக ரூ.450 இப்போது வழங்கப்படுகிறது. இது, ரூ.650 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.5.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்கள், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றால் அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ரொக்கப் பரிசு உயர்த்தப்படுகிறது.அதன்படி, மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், 2-ம் இடம் பெறுவோருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், 3-ம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் ரொக்கப் பரிசு உயர்த்தி வழங்கப்படும்.இதேபோன்று, 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், 2-ம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், 3-ம் இடம் பெறுவோருக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் ரொக்கப் பரிசு அதிகரிக்கப்படும்.மாற்றுத் திறனுடையோருக்கு உதவுவோருக்குச் சலுகைகள்: மாற்றுத் திறனாளிகள் ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்குச் செல்வர். அவர்களுடன் ஒரு துணையாள் சென்றால் அரசு பஸ்களில் பயணம் செய்ய பயணச் சலுகை வழங்கப்படும்.இந்தத் திட்டத்தினால் 32 ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயன்பெறும் சுமார் 2 ஆயிரத்து 390 மாணவர்களின் பெற்றோர் பயன் பெறுவர். மேலும், இந்தத் திட்டத்துக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுதும் உதவியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.100 என்ற வகையில் இப்போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.250 ஆக உயர்த்தி அளிக்கப்படும். இதன் மூலம் 500 மாணவர்கள் பயன் அடைவர். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.27.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.இடை நிறுத்தத்தைத் தடுக்க...: அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, முதல் பிளஸ் 2 வரையில் சுமார் 1,400 குழந்தைகள் படித்து வருகின்றனர்.அவர்கள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு தலா ரூ.1,500-ம், பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.22.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரத்து 14 சிறப்பு ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.12.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் வளர்மதி.

Friday 13 April 2012

பன்றி காய்ச்சல் தடுப்பூசி அவசியமா?


பன்றி காய்ச்சல் தடுப்பூசி அவசியமா?

"பன்றிக் காய்ச்சல் தொடர்பான சுகாதாரத் துறை அமைச்சரின் அறிவிப்பும்; காய்ச்சலை பரப்பும் வைரஸ் பற்றிய தகவலும், பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி குறித்த குழப்பத்தை, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ள, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தடுப்பூசி விஷயத்தில் குழப்பமான மனநிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அவசியமில்லை:"தொற்று நோய் அளவுக்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் இல்லாததால், தடுப்பூசி தேவையில்லை' என, சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும், காய்ச்சலை பரப்பும், "எச்1 என்1' வைரஸ், பருவ நிலைக்கு ஏற்ப, தன்னை
தகவமைத்துக் கொள்ளும்; பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி, ஓராண்டில் காலாவதி ஆகிவிடும் போன்ற தகவல்கள், தடுப்பூசி தொடர்பான குழப்பத்தை அதிகரித்துள்ளது.
காலாவதி தேதி...:இதுகுறித்து, தடுப்பு மருத்துவப் பிரிவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியதாவது: பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, ஓராண்டிற்குள் காலாவதி ஆகும்படி இருந்தால், அதில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் இயல்பும் காரணமாக இருக்கலாம். "எச்1 என்1' வைரஸ், உருமாற்றம் பெற்று விட்டதாக, உலக சுகாதார நிறுவனம், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.எனவே, கடந்த முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் (ஓராண்டிற்கு முன்), தற்போது மீண்டும் போட வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்கள், பன்றிக் காய்ச்சலின்
பீதியிலிருந்து விடுபட, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.வெளிச் சந்தையில் கிடைக்கும், "பான்டிபுளு' தடுப்பூசியின் காலாவதி தேதியை, கவனித்து வாங்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே, இதை போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பரிசோதனைக்கு ரூ.3,000:பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிவதற்கான பரிசோதனை செய்ய, 12 தனியார் ஆய்வகங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆய்வக உரிமையாளர்களுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், நோய் கண்டறியும் பரிசோதனைக்கு, 5,000 முதல், 7,000 ரூபாய் வரை இருந்த கட்டணத்தைக் குறைத்து, 3,000 ரூபாய் மட்டுமே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களும் வசூலிக்க வேண்டும் என, அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். ஆய்வக உரிமையாளர்கள், இதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த பரிசோதனை விவரங்களை, அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை, அரசின், "கிங்' நிலைய ஆய்வகத்தின் மூலம், தரக் கட்டுப்பாடுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது
நன்றி-தினமலர்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கிருஷ்ணகிரி சார்பாக அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


கல்வி உரிமைச் சட்டம்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு


2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு விதிமுறைகள் செல்லத்தக்கவை தான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் அரசு உதவிபெறாத சிறுபான்மையினர் பள்ளிகளைத் தவிர இதர அனைத்துப் பிரிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளும் 25 விழுக்காட்டு இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு இன்றுமுதலே நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறுபான்மை அமைப்புகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும், அரசிடம் இருந்தோ, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தோ நிதி உதவி பெறாத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Monday 9 April 2012

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு- அரசாணை பிறப்பிப்பு


தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு- அரசாணை பிறப்பிப்பு


Jayalalitha        
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது வாசித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

அரசால் தீட்டப்படும் திட்டங்களை செயல்படுத்துவதிலும், நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப் படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள்.

இதே போன்று எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ- மாணவியரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சிறந்த செல்வமாம் கல்விச் செல்வத்தை போதிக்கும் உன்னதமான, தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாப் பணியை ஆற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை எனது தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது.

அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், 1.1.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 7 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியது போல், தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் 1.1.2012 முதல் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.1.2012 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,383.49 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Sunday 8 April 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு புது அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஒரே நாளில் இரு தேர்வுகளை நடத்தும்போது, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்றும், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் நடத்தாமல், வெவ்வேறு நாட்களில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


என்.சி.இ.ஆர்.டி.-க்கு இணையான தரத்துடன் தமிழ்நாட்டில் எஸ்.சி.இ.ஆர்.டி. என்ற புதிய அமைப்பு

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, "ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை (டைரக்டரேட் ஆப் டீச்சர் எஜுகேஷன் ரீசர்ச் அண்டு டிரெய்னிங்), மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக (ஸ்டேட் கவுன்சில் ஆப் எஜுகேஷன் ரீசர்ச் அண்டு டிரெய்னிங்) தரம் உயர்த்தப்படும்", என, அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்த, இப்போது தமிழக அரசு அரசாணையாகப் பிறப்பித்துள்ளது.

அரசாணை கூறுவது என்ன?
அதிகரித்து வரும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு, கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. இதுபோன்ற ஒரு நிறுவனம், தமிழகத்தில் இல்லை என்பதால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அளித்த பல்வேறு பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்படுகின்றன. தற்போது, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தப்படுகிறது. என்.சி.இ.ஆர்.டி., அமைப்புக்கு இணையான தரத்துடன், எஸ்.சி.இ.ஆர்.டி., என்ற இந்த அமைப்பு செயல்படும்.
  • அனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்குனரகம் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் கீழ், தனித்தனியே ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சிகள் அனைத்தையும், இனி மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமே நடத்தும்.
  • கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், அதற்கேற்ப பயிற்சிகளை, மாநிலக் கல்வி ஆராய்ச்சிக் குழுமம் வழங்கும். இதற்கென, பயிற்சித் திட்டங்களை மாற்றி அமைத்து, மேம்படுத்தப்பட்ட திட்டங்களையும் இந்நிறுவனம் உருவாக்கும்.
  • தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்களை, இனி இந்நிறுவனமே உருவாக்கும்.
  • அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டங்களை பின்பற்றி, மாதிரி பாடப் புத்தகங்களையும் உருவாக்கும்.
  • இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், இனி மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமே பயிற்சிகளை அளிக்கும். வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடக்கும் அனைத்து வகையான பயிற்சிகளையும், இந்நிறுவனம் கண்காணிக்கும். 
  • மாநில பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, கல்வித்துறைக்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு, அவை அமல்படுத்தப்படும்.
  • மாநில அளவில், மாணவர்களுக்கு திறனறிதல் திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் தனித்திறன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்

Saturday 7 April 2012


தொடர் மதிப்பீட்டு முறையில் 4 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக ஏப்ரல் 16-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 4 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
இதில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சம் ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சம் ஆசிரியர்களும் பயிற்சி பெறவுள்ளனர். வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக முப்பருவ முறை அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
முப்பருவ முறையோடு தொடர் மதிப்பீட்டு முறையும் முதல்முறையாக அமல்படுத்தப்படுகிறது. தொடர் மதிப்பீட்டு முறையின் கீழ் முழு ஆண்டுத் தேர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மாணவரின் ஆண்டு முழுவதுமான செயல்பாடு, கற்றல் திறன் போன்றவை மதிப்பீடு செய்யப்படும்.
இசை, விளையாட்டு, ஓவியம், மாணவர்களின் சுகாதாரம் போன்றவற்றுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். பயிற்சிக் கையேடு: ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் தொடர் மதிப்பீட்டு முறையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க பாடவாரியாக கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் தொடர் மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும், தர அட்டையை தயாரிப்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இசை, ஓவியம், விளையாட்டு, பேச்சு, சுகாதாரம் குறித்த புரிதல் ஆகியவற்றை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது குறித்தும் இந்த கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குச் செயல்விளக்கத்துடன் எவ்வாறு பாடம் நடத்தலாம் என்பது குறித்தும் இந்த கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாகவும், எளிமையாகவும் உள்ளனவா என்று மாவட்டந்தோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் தெரியவந்த விவரங்களும் பயிற்சிக் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
பயிற்சி: முதல் கட்டமாக, தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், வட்டார வள பயிற்றுநர்களுக்கும் தொடர் மதிப்பீட்டு முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்பிறகு, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியிலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே மாதமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

Tuesday 3 April 2012


6 முதல் 9 வகுப்பு வரை
TIME TABLE

முழு ஆண்டு தேர்வு -2012

6 முதல் 9 வகுப்பு வரை
TIME TABLE

மின்கட்டண குறைப்பு : முதல்வர் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மின்கட்டணத்தில், குறைப்பு செய்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


குறைப்பு விபரம் : இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். அதன்படி,

1 முதல் 100 யூனிட்களுக்கு - ரூ. 1.10 லிருந்து ரூ. 1

101 முதல் 200 யூனிட்களுக்கு - ரூ. 1.80 லிருந்து ரூ. 1.50

2 மாதங்களில் 500 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு

1 முதல் 200 யூனிட் வரை - ரூ. 3லிருந்து ரூ. 2

201 முதல் 500 யூனிட்களுக்கு - ரூ. 3.50 லிருந்து ரூ. 3 ஆக குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

Sunday 1 April 2012

* 10TH STD MATHS SCORE BOOK (EM)

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

"ஒரே ஒரு தேர்வு தான்"
'தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் வரை, "இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்; இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.
 

புதிய அரசாணை விவரம்:
கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.
*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பு புதிதல்ல...:

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை. இரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிரியர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, திருச்சியில், சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, "விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

மதிப்பெண்கள் தான் முக்கியம்:
இந்த அரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில், அவர்கள் தேர்வு செய்யப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே, அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

கால அவகாசம் நீட்டிப்பு:

கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட, இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய, போதுமான கால அவகாசம் வழங்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.
MyFreeCopyright.com Registered & Protected