Sunday 8 July 2012

                  TNPSC GR.IV- TENTATIVE ANSWER KEY                  


                          > GENERAL KNOWLEDGE                          > GENERAL TAMIL                         > GENERAL ENGLISH 


ஆசிரியர் தகுதித் தேர்வு: ஒரு லட்சம் விண்ணப்பம் தள்ளுபடி


    ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(டி.இ.டி.,) விண்ணப்பங்களை தவறாக பூர்த்தி செய்த காரணத்திற்காக, ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக, இணை இயக்குனர் சேதுராமவர்மா கூறினார்.

  தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட் கிடைக்காதவர்களிடம் இருந்து திண்டுக்கல்லில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முகாமிட்டிருந்தார்.

   விண்ணப்ப நகல், வங்கி சலான் நகல் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. நகல் இல்லாதவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என அதிகரிகள் கைவிரித்தனர். ஏமாற்றமடைந்தவர்கள் அலுவலக வாசலில் ரோடு மறியல் செய்தனர். போலீசார் இவர்களை சமாதானப்படுத்தினர். கல்வி அலுவகத்திற்குள் சென்ற இவர்கள் இணை இயக்குனரை முற்றுகையிட்டனர். 

   இதுபற்றி சேதுராமவர்மா கூறியதாவது: திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 140 பேர் விண்ணப்பத்தின் நகலுடன் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஹால் டிக்கெட் தரப்படும். மற்றவர்கள் விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்திருக்கலாம். மாநிலம் முழுவதும் தவறாக பூர்த்தி செய்த ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தவறு இருந்தால் தெரிவிக்கலாம் என மே 24 அன்று அறிவித்திருந்தோம். தற்போது ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: தேர்வுத்துறை

   பத்தாம் வகுப்பு தனித்தேர்வர், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இம்மாத இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டுக்காக நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தனித் தேர்வராகப் பங்கேற்கும் மாணவர், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு செய்ய வேண்டும். 

   இதற்காக நடக்கும் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, ஜூன் 30க்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், இதற்காக அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    கடைசி தேதியை நீட்டிப்பு செய்யக் கேட்டு, அதிகளவில் கடிதங்கள் வந்தன. மேலும், ஏப்ரலில் நடந்த எட்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாத நிலையில், அதில் தேர்ச்சி பெறுபவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர்.

   எனவே, அடுத்த ஆண்டு நடக்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, தனித்தேர்வாக எழுத இருப்பவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இம்மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
MyFreeCopyright.com Registered & Protected