சி.எப்.எல்., பல்பிலும் சிக்கல்
மின்தடையும், தட்டுப்பாடும் நிலவும் சூழ்நிலையில் மின்சாரத்தைச் சேமிக்க சி.எப்.எல்., பல்புகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது.குண்டு பல்புகளை விட 3 மடங்கு குறைவான மின் ஆற்றலை பயன்படுத்துகின்றன. சி.எப்.எல்., விளக்கில் பாதரசம் உள்ளது. சி.எப்.எல்., பல்பை விற்கும் கடைக்காரரை அவற்றைச் சேகரித்து அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் அனுப்ப வேண்டும் என்னும் சட்ட விதி உள்ளது.
ஆனால் இது குறித்த விழிப்புணர்வு சி.எப்.எல்., பல்பை வாங்குவோருக் கும், கடைக்காரர்களுக்கும் இல்லை. விற்கும் நிறுவனங்களும் இதனை கண்டு கொள்ளவில்லை. பியூஸ் ஆன உடன் தூக்கி எறியப்படும் சி.எப்.எல்., வழியாக பாதரசம் மண்ணில் சேர்கிறது. ஒரு பாதரச தெர்மாமீட்டரில் உள்ள பாதரசம் ஒரு நீர்நிலையையே மாசுபடுத்த போதுமானது.
சி.எப்.எல்., பல்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்கள் அவை மறுசுழற்சி செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும். ஏனெனனில் பாதரச மாசுபாடு மனிதர்களின் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கும்.
தகவல்: தினமலர்..

_________________________________________________________________________________
சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு.!
சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம்
வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது.
அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.
பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.
ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்களின் படங்கள்:
![]() |
| வாழைப் பழம் |

| திராட்சை பழங்கள் |
அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.
![]() |
| கொய்யாப் பழங்கள் |
சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.
![]() |
| ஆரஞ்சு |
பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.
ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்களின் படங்கள்:
![]() |
| நெல்லிக் கனிகள் |
![]() |
| நட்சத்திர பழங்கள் |
![]() |
| நாவல் பழங்கள் |
![]() |
| தக்காளிப் பழங்கள் |
![]() |
| ஆப்பிள் பழங்கள் |
`
![]() |
| பப்பாளிப் பழம் |
![]() |
| செர்ரி பழங்கள் |
விழிப்புணர்வு! Awareness!
- பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!
- தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
- இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
- விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .
- பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
- பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
- பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
- மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
- இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
- பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
- மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
- நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .
- Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
- இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
- இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .
- இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
- மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .
- இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.
- Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
- மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
- நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
- இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
- நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
- இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .
- நன்றி -https://www.facebook.com/
pages/உலக-தமிழ்-மக்கள்-இயக்கம்/ 210804085646629?sk=wall

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1
விண்ணில் வெற்றிகரமாகசீறிப்பாய்ந்தத ரிசாட்-1
இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரீசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுமார் 380 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை சம்பந்தமான துறைகளுககும், மற்றும் அனைத்து விதமான துறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு,மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ள காலகட்டங்களிலும் புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறமை கொண்டது.
சரியான பாதையில் செல்கிறது; திட்டமிட்டபடி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த ரிசாட்-1 சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1858 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி , தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
நீண்ட தூர கவுன்ட் டவுன்கள்: முன்னதாக 72 மணி நேர கவுன்ட் டவுன்கடந்த திங்கட்கிழமை முதல் துவங்கி திட்டமிட்டபடி இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்க 5.47 மணியளவில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
பயன்கள்:ரிசாட் இரவு மற்றும் பகல் என எந்த நேரத்திலும் காலநிலை குறித்து துல்லியமாக புகைப்படத்தினைஅனுப்பும் திறன் கொண்டது.
10ஆண்டு கனவு: ரிசாட்-1 வகை செயற்கைகோள் 10 ஆண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பில் இந்தயாவிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் ஆகும். கடந்த 2009-ம்ஆண்டில் செலுத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைகோள் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்தை துல்லியமாக கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஏவப்பட்ட ரிசாட் 1 வகை செயற்கைகோள் தன்னுடைய இலக்கை 596 கி.மீ., தொலைவில் உள்ள புவிவட்ட பாதையை அடைந்துள்ளது.
விஞ்ஞானிகள் பெருமிதம்: தனிச்சிறப்பு வாய்ந்த தொழில் நுட்பம் மற்ற நாடுகளின் உதவியில்லாமல் நம்முடைய தொழி்ல்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரேல் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போதைய ரிசாட் -1 விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் ஒரே புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அதி நவீன தொழில் நுட்பம்: தற்போது ஏவப்பட்ட ரிசாட்-1 செயற்கைகோளில் எஸ்.ஏ.ஆர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1மி.மீ நீள, அகலமுள்ள பொருட்களை துல்லியமாக படம்பிடிப்பதுடன் எதிரி நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.இருப்பினும் இதுகுறித்து தகவலை இஸ்ரே வெளியிடவில்லை . மேலும் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ தொழில் நுட்ப பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது
.
தானிய உற்பத்தியை அதிகரிக்க பயன்படும்: ரிசாட்-1 செயற்கை கோள் தானிய உற்பத்தியை அதிகரிப்பதி்ல பெரும் பங்கு வகிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கோதுமை பயிரிடும் பரப்பளவு தேவைப்படும் நீரின் அளவு போன்றவற்றையும் துல்லியமான தகவல்களை தர வல்லது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை
கட்டி முடித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகியும் நேற்றுதான் கட்டியது போல கலையழகும், கம்பீரமும் குறையாமல் காணப்படும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் "பாஸ்ட் புட்' போல போகிற போக்கில் பார்க்கக்கூடிய இடமல்ல. நின்று நிதானித்து குறளோடும், குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும்.'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று இடைக்காட்டராலும் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ' என்று ஒளவைப் பெருமாட்டியாலும் சிறப்புற போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யப்பட வேண்டும் என்ற, தமிழ் சான்றோர்களின் நீண்ட காலக்கனவை நனவாக்கும் வகையில் ஐந்து ஏக்கரில் கலை நுணுக்கத்தோடு வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டது.அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் திறந்த புத்தக வடிவில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.கோட்டத்தி ன் மேல்தளமான வேயா மாடத்தில் திருக்குறளின் முப்பாலை குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும்.எல்லாவற்றிக்கு ம் மேலாக திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல செதுக்கி வைத்துள்ள சிற்பத் தேரானது வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் திகழ்கின்றது. இந்த சிற்பத்தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது. ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு பிரம்மாண்டமாக சக்கரங்கள் உளளது. தேரின் கருங்கல் சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடியும், பருமன் 2 1/2 அடி என்றால் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் என்று தேடித்தேடி கற்கள் கொண்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்குறள் ஆய்வரங்கம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; வருடம் முழுவதும் திறந்தே இருக்கும். அனுமதிக் கட்டணம் பெரியவர்களுக்கு மூன்று ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் வாங்குகிறார்கள். இங்குள்ள அரங்கில் அடிக்கடி கைவினைப் பொருள் கண்காட்சி போல ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். அப்படி கண்காட்சி நடக்கும் நாட்களில் அனுமதி இலவசமாகும்.செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்தை தங்களது சொந்த கட்டிடம் போல நன்கு பராமரித்துவரும் அலுவலர்கள், எந்த விவரம் கேட்டாலும் தெளிவாக கூறுகிறார்கள். வாகன நிறுத்த தொல்லை, மக்கள் நெரிசல் இல்லாமல் நல்ல காற்றோட்டத்துடன் நகரின் மையத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க சிறந்த இடமே. மேலும் விவரத்திற்கு போன் எண்: 28172177.
- எல்.முருகராஜ்
நன்றி: தினமலர்
விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1
விண்ணில் வெற்றிகரமாகசீறிப்பாய்ந்தத ரிசாட்-1
இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரீசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுமார் 380 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை சம்பந்தமான துறைகளுககும், மற்றும் அனைத்து விதமான துறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு,மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ள காலகட்டங்களிலும் புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறமை கொண்டது.
சரியான பாதையில் செல்கிறது; திட்டமிட்டபடி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த ரிசாட்-1 சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1858 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி , தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
நீண்ட தூர கவுன்ட் டவுன்கள்: முன்னதாக 72 மணி நேர கவுன்ட் டவுன்கடந்த திங்கட்கிழமை முதல் துவங்கி திட்டமிட்டபடி இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்க 5.47 மணியளவில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். பயன்கள்:ரிசாட் இரவு மற்றும் பகல் என எந்த நேரத்திலும் காலநிலை குறித்து துல்லியமாக புகைப்படத்தினைஅனுப்பும் திறன் கொண்டது.
10ஆண்டு கனவு: ரிசாட்-1 வகை செயற்கைகோள் 10 ஆண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பில் இந்தயாவிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் ஆகும். கடந்த 2009-ம்ஆண்டில் செலுத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைகோள் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்தை துல்லியமாக கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஏவப்பட்ட ரிசாட் 1 வகை செயற்கைகோள் தன்னுடைய இலக்கை 596 கி.மீ., தொலைவில் உள்ள புவிவட்ட பாதையை அடைந்துள்ளது.
விஞ்ஞானிகள் பெருமிதம்: தனிச்சிறப்பு வாய்ந்த தொழில் நுட்பம் மற்ற நாடுகளின் உதவியில்லாமல் நம்முடைய தொழி்ல்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரேல் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போதைய ரிசாட் -1 விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் ஒரே புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அதி நவீன தொழில் நுட்பம்: தற்போது ஏவப்பட்ட ரிசாட்-1 செயற்கைகோளில் எஸ்.ஏ.ஆர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1மி.மீ நீள, அகலமுள்ள பொருட்களை துல்லியமாக படம்பிடிப்பதுடன் எதிரி நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.இருப்பினும் இதுகுறித்து தகவலை இஸ்ரே வெளியிடவில்லை . மேலும் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ தொழில் நுட்ப பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது
. தானிய உற்பத்தியை அதிகரிக்க பயன்படும்: ரிசாட்-1 செயற்கை கோள் தானிய உற்பத்தியை அதிகரிப்பதி்ல பெரும் பங்கு வகிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கோதுமை பயிரிடும் பரப்பளவு தேவைப்படும் நீரின் அளவு போன்றவற்றையும் துல்லியமான தகவல்களை தர வல்லது.
|

No comments:
Post a Comment