Thursday 31 May 2012


ஏற்கனவே திட்டமிட்டபடியே பள்ளிகள் திறக்கப்படும்


ஏற்கனவே அறிவித்தபடி, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன.
ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், 4ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பின், மீண்டும் பள்ளிக்கு கிளம்ப மாணவர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு, பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பொதுத்தேர்வும், தள்ளிப்போனது.

ஆனால் இந்தாண்டோ, பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, புதுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினியோகிக்கப்பட்டுள்ளன. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி 1ம் தேதி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதன்பின், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள். எனவே, 4ம் தேதி திங்கட்கிழமையில் இருந்து பள்ளிகளை துவங்குவதற்கு, பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்து, அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
வேலை நாட்கள் விவரம்: பள்ளிக் கல்வியின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஜூன் 1ல் துவங்கி, 2013 ஏப்ரல் 20ம் தேதி வரை, 200 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 2013 ஏப்ரல் 30ம் தேதி வரை, 220 நாட்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Monday 28 May 2012


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - பயிற்சி கால அட்டவணை

  • First Spell (28th and 29th of May) 
  • Second Spell (30th and 31st of May)
FIRST DAY PROGRAMME

1. 09.30 am -10.00 am Registration, Inauguration & Pre Test
2. 10.00 am-11.30 am CCE Upper Primary General Guidelines PPT Presentation
3. 11.30 am-11.45 am Tea Break
4. 11.45 am-01.00 pm CCE Upper Primary General Guidelines PPT Presentation and Discussion
5. 01.00 pm-02.00 pm Lunch Break
6. 02.00 pm-02.15 pm Dividing Participants into subject groups
7. 02.15 pm-03.45 pm Subject Manual PPT Presentation
8. 03.45 pm-04.00 pm Tea Break
9. 04.00 pm-05.00 pm Discussion on Subject Manual 
10. 05.00 pm-05.30 pm Allotting Subject Units to each participant for preparation and presentation of FA (a) activities (They have to prepare and present their activities on the next day) 
 
SECOND DAY PROGRAMME 

1.    10.00 am-11.30 am Presentation of FA (a) activities in the subject by participants. 
2.    11.30 am-11.45 am  Tea Break 
3.    11.45 am-01.00 pm Presentation of FA (a) activities in the subject by participants.-continues 
4.    01.00 pm-02.00 pm  Lunch Break 
5.    02.00 pm-03.30 pm Presentation of FA (a) activities in their subject by participants – continues 
6.    03.30 pm-04.00 pm  Tea Break 
7.    04.00 pm-05.00 pm  Post –Test and valediction 
.

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.


பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.

அமைச்சர் அறிவிப்பு:கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில், "பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.அதை தொடர்ந்து, புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை, அறிக்கையை ஒன்றை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியது.

அரசாணை வெளியீடு:அதன் அடிப்படையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.

தண்டனை என்ன
?
  • அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
  • அரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
ஆலோசனை 
  • பள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • மாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, செயலர் சபிதா கூறியுள்ளார்.
தனியார் பள்ளி நடவடிக்கை என்ன?தவறு செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்து, நேரடியாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. எனினும், அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தண்டனை வழங்க, என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப் படுகிறதோ, அதே நடைமுறை, தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பொருந்தும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:



CCE பயிற்சி முக்கிய குறிப்புகள் - SCERT இயக்குனரின் கடிதம்

குறிப்பு 1: ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும்தற்போது
எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்கசென்றிருந்தால் அந்த 
மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில்உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்

குறிப்பு 2: தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில்பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின்நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்துவிலக்கு அளிக்கலாம் என மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிபயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்


இங்கே கிளிக் செய்து இயக்குனர் கடிதத்தை டவுன்லோட் செய்து படியுங்கள் 

Friday 25 May 2012


உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ( 6, 7, 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் ) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான பயிற்சியினை மே மாதத்திற்குள் அளிக்க SCERT திட்டம்

கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு பல புதுமைகளை கல்வித்துறையில் புகுத்தி வருகிறது.இதில் CCEஎனும்  தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை முக்கியமானதாகும்.
மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதோடு அர்த்தமுள்ள மதிப்பீட்டுக்கு வழிகாட்டுகிறது. இப்பயிற்சியானது முதல் முறையாக கல்வி  ஆண்டு தொடங்கும் முன்பே ஆசிரியர்களுக்கு அளிக்கபடுவது சிறப்பாகும். இப்பயிற்சியானது அனைத்து நிலை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்ககல்வி ஆசிரியர்களுக்கும்  முன்பே அளிக்கப்பட்டது. உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கும் பொருட்டு மாநில அளவில் பொள்ளாச்சியிலும்மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட DIET லும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நான்கு ஒன்றியங்களை இணைத்தவாறு ஓர் இடத்தில நடத்தSCERT திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியானது மே28 ஆம் தேதியில்  இருந்து 31 மே-க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆய்வு கூட்டங்கள் மற்றும் பல்வேறு பணிகள் இருப்பதால் தேதிகள் மாற நிறைய வாய்ப்பு உள்ளது 

Wednesday 23 May 2012


+2 மதிப்பெண் சான்றிதழ் 30ம் தேதி முதல் விநியோகம்

Tuesday 22 May 2012

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது..
சுஷ்மிதா 


நாமக்கல் எம்.கந்தம்பாளையம் பள்ளி மாணவி சுஷ்மிதா 1200-க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 2-வது இடத்தை 3 பேர் பிடித்துள்ளனர். நாமக்கல் எம்.கண்டம்பாளையம் எஸ்கேவி பள்ளி மாணவி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஷ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.மகேஸ்வரி, எம்.கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளி மாணவி பிரபா சங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளனர். மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள 6 மாணவ, மாணவிகளும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்கள் அனைவருமே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Saturday 19 May 2012


TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday 18 May 2012


பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள்,பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல அதிகாரிகள், கூடுதலாக ஒருபொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.மாவட்டக்கல்வி அலுவலர்களில், பணிமூப்பு அடிப்படையில், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறப்பதற்குள், பணியிடங்களை நிரப்பினால் தான், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.


S.NO
PLACE
CEOS
PHONE
NUMBER
1
ARIYALUR
ஆர்.வைத்தியலிங்கம்
04326-220909
மாறுதல் பெற்ற பணியிடம்
2
ARIYALUR(SSA)
.
3
CHENNAI
எஸ்.தமிழ்மணி
044-24321735
4
CHENNAI(SSA)
...
5
COIMBATORE
டி.ராஜேந்திரன்
0422-2391849
6
COIMBATORE(SSA)
வி.பிரபாகரன்
.
மாறுதல் பெற்ற பணியிடம்
7
CUDDALORE
சி.ஜோசப் அந்தோணி ராஜ்
04142-286038
8
CUDDALORE(SSA)
எஸ்.வான்மதி
9
DHARMAPURI
செ.அமுதவள்ளி
04342-260085
மாறுதல் பெற்ற பணியிடம்
10
DHARMAPURI(SSA)
04342-261872
11
DINDIGUL
ஜி.மூர்த்தி
0451-2426947
மாறுதல் பெற்ற பணியிடம்
12
DINDIGUL(SSA)
13
ERODE
கே.ஸ்ரீ தேவி
0424-2256499
மாறுதல் பெற்ற பணியிடம்
14
ERODE(SSA)
S.K.VISHVANATHAN
15
KANCHEEPURAM
வி.குமார்
044-27222128
மாறுதல் பெற்ற பணியிடம்
16
KANCHEEPURAM(SSA)
K.G.MALLIKA
.
17
KANYAKUMARI
A.S.RADHAKRISHNAN 
04652-227275
18
KANYAKUMARI(SSA)
19
KARUR
சி.ஜெயலட்சுமி
04324-241805
மாறுதல் பெற்ற பணியிடம்
20
KARUR(SSA)
21
KRISHNAGIRI
எஸ்.சுகன்யா
04343-239249
மாறுதல் பெற்ற பணியிடம்
22
KRISHNAGIRI(SSA)
M.BASKARAN.
23
MADURAI
S.NAGARAJAMURUGAN
0452-2530651
24
MADURAI(SSA)
N.BOSE
25
NAGAPATTINAM
S.SANTHANA THANJAIVANAN
04365-243354
26
NAGAPATTINAM(SSA)
எம்.கே.சுப்பிரமணியன்
மாறுதல் பெற்ற பணியிடம்
27
NAMAKKAL
பி.பொன்னையா
04286-232094
மாறுதல் பெற்ற பணியிடம்
28
NAMAKKAL(SSA)
29
PERAMBALUR
கே.ஜி.மல்லிகா
04328-224020
மாறுதல் பெற்ற பணியிடம்
30
PERAMBALUR(SSA)
G.SEETHARAMAN
31
PUDUKOTTAI
P.SUGUMAR DEVADOSS 
04322-222180
32
PUDUKOTTAI(SSA)
M.S.PARIMALA
33
RAMNAD
எல்.டி.ரங்கநாதன்
04567-220666
மாறுதல் பெற்ற பணியிடம்
34
RAMNAD(SSA)
கே.ராஜராஜன்
மாறுதல் பெற்ற பணியிடம்
35
SALEM
R.ESWARAN
0427-2450254
36
SALEM(SSA)
M.RAVICHANDRAN
37
SIVAGANGAI
வி.ராதாகிருஷ்ணன்
04575-240408
மாறுதல் பெற்ற பணியிடம்
38
SIVAGANGAI(SSA)
39
TANJORE
எஸ்.மதி
04362-237096
மாறுதல் பெற்ற பணியிடம்
40
TANJORE(SSA)
ஆர்.சுப்பிரமணியம்
மாறுதல் பெற்ற பணியிடம்
41
NILGRIS
M.VASU
0423-2443845
42
NILGRIS(SSA)
43
THENI
எம்.ரவிச்சந்திரன்
04546-250315/255392
மாறுதல் பெற்ற பணியிடம்
44
THENI(SSA)
45
THIRUPPUR
N.ANANDHI    
0421-2240301
46
THIRUPPUR(SSA)
.
47
T V MALAI
A.NOORJAHAN
04175-224379/227227
48
T V MALAI(SSA)
GRACE FRAKLIN
49
TIRUVARUR
M.SUBRAMANIYAN
04366-225903
50
TIRUVARUR(SSA)
R.VAITHIYALINGAM
04366-244359 
51
TIRUVALLUR
044-27662599 
52
TIRUVALLUR(SSA)
ப்பி.செல்வகுமாரி
மாறுதல் பெற்ற பணியிடம்
53
TRICHY
K.SELVAKUMAR
0431-2708900
54
TRICHY(SSA)
55
TIRUNELVELI
கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி
0462-2500702/2500949
மாறுதல் பெற்ற பணியிடம்
56
TIRUNELVELI(SSA)
57
TUTICORIN
S.RUKMANI
0461-2326281
58
TUTICORIN(SSA)
J.R.ISAC SUGIRTHARAJ
59
VELLORE
PON.KUMAR
0416-2252690/2258650
60
VELLORE(SSA)
61
VILLUPURAM
P.PONNIYAKOTTI
04146-220402
62
VILLUPURAM(SSA)
S.BOOPATHI
63
VIRUDHUNAGAR
ப்பி.பகவதி நாடார்
04562-252702
மாறுதல் பெற்ற பணியிடம்
64
VIRUDHUNAGAR(SSA)


MyFreeCopyright.com Registered & Protected