Tuesday 19 June 2012


ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் - 35 லட்சம் மாணவர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க உத்தரவு



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 35 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இத்திட்டத்தால், தொலை தூரத்தில் இருந்து பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு&' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதுவரை, சென்னையில் மட்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, சாலை போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு, 32 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு, 35 லட்சம் மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected