Tuesday 19 June 2012


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ரேண்டம் எண் நாளை வெளியீடு

சென்னை : தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 1,695 இடங்கள் உள்ளன. மேலும், 11 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 839 இடங்கள் உள்ளன.

அதேபோல்,
சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 பிடிஎஸ் இடமும், தனியார் கல்லூரியில் 847 இடங்களும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2012,2013ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை கடந்த மே 15ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 40,317 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 28,500 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கினர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நாளை மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சுழற்சி (ரேண்டம்) எண் வழங்கப்படும். 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர் ந்து, ஜூலை 5ம் தேதி காலை முதல் மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சலிங் தொடங்கும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கவுன்சலிங் நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected