Sunday 12 August 2012

மல்யுத்த போட்டிகள்: இறுதி போட்டியில்சுஷில்குமார்

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப்போட்டியில் இந்தியாவின் சுஷில்குமார் , இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். லண்டனில் 30-வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவருகிறது. . 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமார் , இம்முறையும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சற்றுமுன் நடந்த அரையிறுதிபோட்டியில் 66 கி..கி. எடைப்பிரிவில் நடந்த அரையிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் இக்தியோர் ‌நூர்ஸோவை 3-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடந்த விறுவிறுப்பான அரையிறுதி் பலப்பரீட்சையில், மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில்குமார் கடும் சவாலுடன் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் கஜகஸ்தான் வீரர் டனடரேவுடன் மோதினார். 
இன்று நடந்த போட்டியில் மூன்று சுற்று போட்டிகள் நடந்தன. இதில் இந்தியாவின் சுஷில்குமார் அசத்தலான வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து இவருக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்திற்காக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected